1960களின் இறுதி. கேரளத்தின் தமிழ்நாடு எல்லைப் பகுதியிலுள்ள இடுக்கி மாவட்டத்தின் ஒரு மலையோரக் குக்கிராமம். சாலைகள், மின்சாரம் என எந்தவொரு அடிப்படை வசதியுமே அங்கில்லை. அங்கே ஏழு வயதான ஒரு சிறுவன் மலைப் புல்லும் தென்னங்கீற்றும் வேய்ந்த அவ்வூரின் சினிமாக் கொட்டகைகளைல் திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பிக்கிறான். அப்படங்களின் காட்சிகளும் பாடல்களும் அவனது வாழ்க்கையாகவே மாறிவிடுகிறது. காலப்போக்கில் அவன் தமிழிலும் மலையாளத்திலும் ஓர் எழுத்தாளனாகவும் சினிமா நடிகனாகவும் மாறிவிடுகிறான். திரையும் இசையும் விசித்திரமான வாழ்க்கை அனுபவங்களும் நிரம்பி வழியும் அந்த 40 ஆண்டு காலத்தின் நீங்காத நினைவுக் குறிப்புகள்.